undefined

 மீண்டும் எகிறிய தங்கம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

 

 தமிழகத்தில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.  கடந்த  4 நாட்களாக தங்கத்தின் விலை மாற்றமில்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ20 உயர்ந்து ஒரு கிராம்  ஆபரணத் தங்கத்தின் விலை ரூ6715க்கும், சவரனுக்கு ரூ160 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ537200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.    தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.93.50க்கும் ஒரு கிலோ  பார்வெள்ளி ரூ93500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆவணியில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். இதனையடுத்து  பொதுமக்கள் தங்கம் அதிக அளவில் வாங்கத் தொடங்குவர். தங்கத்தின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதம்அ குறைப்பதாக அறிவிக்கப்பட்டது.     இந்தியாவை பொறுத்தவரை   ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் நகையாக மட்டுமின்றி பெரும் சேமிப்பாகவும் அமைந்துள்ளது.  இந்த நிலையில், சமீபகாலமாக தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே சென்றது.  இதனால் நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் இனி வாங்கவே முடியாதோ என்ற நிலை உருவானது.

இதனால், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தங்கம் விலையை குறைக்க ஏதேனும் அறிவிப்பு வருமா? என மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதம் மத்திய அரசு குறைப்பதாக அறிவித்ததும் நகைப்பிரியர்கள், தங்கத்தின் மீதான முதலீட்டாளர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.  தங்கத்தின் மீதான இறக்குமதி வரியுடன் வெள்ளி, பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆபரணங்கள் விலை கணிசமாக குறையலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை