undefined

கிருஷ்ண ஜெயந்தி நாளில்  எகிறிய தங்கம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

 

 இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில்  தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி  குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இறக்குமதி விகிதம் 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகவும் குறைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர்  அறிவித்தார்.

பட்ஜெட் எதிரொலியாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இதனால், நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனையடுத்து  அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280-க்கு விற்று வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று  கிராமுக்கு ரூ35 உயர்ந்துள்ளது.

இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ6695க்கும், சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.53,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 30 காசுகள் உயர்ந்து ரூ.93-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை