undefined

ஆடிவெள்ளிக்கிழமையில் தாறுமாறாக உயர்ந்த தங்கம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

 

இந்தியாவில் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ3000க்கும் மேல் குறைந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த  3  நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருவது நகைப்பிரியர்களை  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து  ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.51,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  
இன்று ஆகஸ்ட் 2 வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ30 உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ6460க்கும், சவரனுக்கு ரூ240 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ ரூ.51,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ91க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ91000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.