undefined

தாறுமாறாக சரிந்த தங்கம்...  நகைப்பிரியர்கள் உற்சாகம்!

 

 

பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை சரியத் தொடங்கியுள்ளது. இதன் அடிப்படையில் இன்று ஜூலை 30ம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,385க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.51,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறையத் தொடங்கிய அதே நேரத்தில் வெள்ளி விலையும் குறைந்து வருகிறது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ89க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ89000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

தற்போது ஆடி மாதம் என்பதால், அடுத்த மாதமான ஆவணியில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். இதனையடுத்து  பொதுமக்கள் தங்கம் அதிக அளவில் வாங்கத் தொடங்குவர். தங்கத்தின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது.     இந்தியாவை பொறுத்தவரை   ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் நகையாக மட்டுமின்றி பெரும் சேமிப்பாகவும் அமைந்துள்ளது.  இந்த நிலையில், சமீபகாலமாக தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே சென்றது.  இதனால் நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் இனி வாங்கவே முடியாதோ என்ற நிலை உருவானது.

இதனால், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தங்கம் விலையை குறைக்க ஏதேனும் அறிவிப்பு வருமா? என மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதம் மத்திய அரசு குறைப்பதாக அறிவித்ததும் நகைப்பிரியர்கள், தங்கத்தின் மீதான முதலீட்டாளர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.  தங்கத்தின் மீதான இறக்குமதி வரியுடன் வெள்ளி, பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆபரணங்கள் விலை கணிசமாக குறையலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா