undefined

அட்சய திருதியை நாளில் அடுத்தடுத்து  அதிர்ச்சி... ஒரே நாளில்  3 வது முறையாக உயர்ந்த தங்கம்!

 
 அட்சய திருதியை தினமான இன்று மட்டும் காலையில் இருந்து 2 முறை தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஏற்கனவே நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இன்று மீண்டும் 3 வது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.இதனால் முதலீட்டாளர்கள் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி ஒரு கிராமுக்கு ரூ65 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 6770க்கும்,  சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ54,160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அட்சய திருதியை நாளான இன்று காலையில் முதல்கட்டமாக  தங்கம் விலை சவரனுக்கு ரூ360 உயர்ந்த நிலையில்,  2 வது கட்டமாக  மேலும் ரூ360 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ53,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் இன்று அட்சய திருதியை முன்னிட்டு, நகைக் கடைகள் வழக்கமான நேரத்தை விட முன்னதாக திறந்து வைத்து வியாபாரம் செய்ய துவங்கினார்கள். ஆபரண தங்கத்தின் விலை திடீரென சவரனுக்கு ரூ.360 உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.அட்சய திருதியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஆலயங்களிலும், நகைக் கடைகளிலும் பெண்களின் கூட்டம் அதிகரித்தது. அட்சய திருதியை அன்று ஒரு பொட்டு தங்கமாவது வாங்க வேண்டும் என்றும், இன்று தங்கம் வாங்கினால் தொடர்ந்து செல்வ வளம் அதிகரிக்கும் என்பதும் மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. பல நகைக் கடைகளிலும் இன்று அட்சய திருதியை முன்னிட்டு, கடந்த 10 நாட்களுக்கு முன்பிருந்தே கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக முன்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னையில் காலை நேர விலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

பல மாவட்டங்களில் அட்சய திருதியை முன்னிட்டு, நகைக்கடைகளின் வாயிலில் தோரணங்கள் கட்டி, அலங்கரிக்கப்பட்டு தங்கத்தின் விற்பனையை அதிகரிக்க வழக்கமான நேரத்தை விட  முன்கூட்டியே கடையைத் திறந்து விற்பனை தொடங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த சில நாட்களாக விலை அதிகரித்து வரும் நிலையில், தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ.360 அதிகரித்து, சவரன் தங்கம் ரூ.53,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இன்று நகை வாங்க காலையிலேயே கடைக்கு சென்றவர்கள், இந்த திடீர் விலை அதிகரிப்பால் அதிர்ச்சியடைந்தனர். தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரவே வாய்ப்புகள் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!