undefined

புதிய உச்சம் தொட்ட தங்கம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி...!!

 

தீபாவளிக்கு பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முதலீட்டாளர்கள், நகைப் பிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தீபாவளியை அடுத்து தங்கத்தின் விலை குறையும் எனஎதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. அதன்படி கடந்த  3 நாளில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ880 அதிகரித்துள்ளது . இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ65 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5700க்கும், சவரனுக்கு ரூ520 அதிகரித்து  ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 45600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ1.50 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ79.50க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ79500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

தங்கத்தின் விலை நாணய ஏற்ற இறக்கங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் போன்ற பிற காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் மீதான சேமிப்பு இல்லத்தரசிகள், முதலீட்டாளர்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது அவசர, அவசிய கால கட்டத்தில் தங்க நகைகள் தான் உடனடி பணமாக்க முடியும் என்பதே இதற்கு காரணம். 

தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப்படுவதும் நம்மவர்களின் இயல்பு. அமெரிக்க  பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய பங்கு சந்தைகளிலும் அதன் எதிரொலியாய் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், பலரும் பாதுகாப்பு கருதி தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்பியிருப்பதால், இப்போதைக்கு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் நிகழாது எனவும், தங்கத்தின் விலை பெரிய அளவில்  குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த விலைகளை பார்க்கும் போது  மக்களுக்கு தங்கத்தின் மீது ஒரு பயம் வருகிறது.  அதனால், மக்கள் தங்கம் வாங்குவதற்கு யோசனை செய்து வருகின்றனர்.ஆனால் முதலீட்டாளர்களை பொறுத்தவரை இது  ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. அதே நேரத்தில் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்கு பெரும்  அதிர்ச்சியாகவே உள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை குறையுமா என எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!