செம.. .யூடியூப் பார்த்து   படித்து   நீட் தேர்வில்  687 மதிப்பெண்  எடுத்து திருப்பூர் மாணவன் சாதனை!

 

 திருப்பூர் மாவட்டம், காங்கேயம் குள்ளம்பாளையத்தில்   அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தவர் சஞ்சய் . இவர்  இணையதளம் மூலமாக யூடியூபில் நீட் தேர்வு சம்பந்தமான வீடியோக்களை பார்த்து தானே படித்து வந்தான். இதன் மூலமே  கல்வி பயின்று முதல் முயற்சியிலேயே 720 மதிப்பெண்களுக்கு 687 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார் .இது குறித்து  மாணவர் சஞ்சய் நான் காங்கேயத்தில் வசித்து வருகின்றேன். எனது பெற்றோர்கள் ரமேஷ் மற்றும் காஞ்சனா. தந்தை ரமேஷ் சொந்தமாக அரசி கடை வைத்து  நடத்தி வருகிறார்.

நான் ஊதியூர் அருகே குள்ளம் பாளையத்தில் உள்ள சாந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் 11,12ம் வகுப்பு படித்தேன்.  மருத்துவம் படிக்க வேண்டும் என்பது என் கனவு. இதனால் மேல்நிலைப் பள்ளி படிப்பின் போதே எனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள தனியார் பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் எனது சொந்த முயற்சியில் இணையதளம் மூலமாக யூடியூபில் நீட் தேர்வு குறித்த  வீடியோக்களை பார்த்து படித்து வந்தேன். இதன் மூலம் முதல் முயற்சியிலேயே 720 மதிப்பெண்களுக்கு 687 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.  


இந்த வெற்றிக்கு எனது பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியோர் சிறந்த ஊக்கம் கொடுத்தனர். இதனால் தான் என்னால் இந்த வெற்றியை பெற முடிந்தது.  இந்திய அளவில் 25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், நான் முதல் முயற்சியிலேயே 687 மதிப்பெண்கள் பெற்றுவிட்டேன். இதற்கு விடாமுயற்சி தான் காரணம் எனக் கூறியுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!