undefined

Tirupati Laddu: அடுத்த அதிர்ச்சி... லட்டில் பான்பராக் கவர்... வைரலாகும் வீடியோ!

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு செய்ய நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை பயன்படுத்தப்பட்டது"  சமீப காலங்களாக சர்ச்சை கிளம்பி நாடு முழுவதும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிற நிலையில், அடுத்த அதிர்ச்சியாக பக்தர் ஒருவர் வாங்கியிருந்த திருப்பதி லட்டு பிரசாதத்தில், குட்கா பாக்கெட் இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. 

இந்நிலையில், தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், கொல்லகுடத்தைச் சேர்ந்த பத்மாவதி என்ற பக்தை, கடந்த 19-ம் தேதி திருப்பதி கோயிலுக்கு தரிசனத்துக்காக குடும்பத்துடன் சென்றிருந்த நிலையில், தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்குவதற்காக பிரசாத லட்டு வாங்கிருக்கிறார். 

இந்நிலையில் வீடு திரும்பியதும் உறவினர்களுக்கு பிரசாதம் கொடுக்க லட்டை உடைத்து பார்த்தபோது அதிர்ச்சியளிக்கும் விதமாக லட்டில் குட்கா பாக்கெட் இருந்திருக்கிறது. மேலும் குட்கா துகள்களும், அதன் வாடையும் லட்டில் கலந்திருக்கிறது. இதைப் பார்த்து அதிச்சியடைந்த தொண்டு பத்மாவதி இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.  இந்தச் செய்தி தற்போது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக விசாரணை நடத்த தேவஸ்தான குழு கொல்லகுடம் புறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!