undefined

 இன்று முதல் நெல்லை - திருச்செந்தூர் ரயில்கள் மீண்டும் இயக்கம்... 40 நாட்களுக்குப் பின் பயணிகள் மகிழ்ச்சி!

 
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மின் தடம் மாற்றி அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இன்று நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையே  40 நாட்களாக நிறுத்தப்பட்ட  2 ரயில்களும்  இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து தென்னக ரயில்வேயின் அறிவிப்பின்படி, நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் நவம்பர் 22ம் தேதி வரை மின்தடம் மாற்றியமைக்கும் பணிகள் நடைபெறுவதால்  திருச்செந்தூரில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் நெல்லை பயணிகள் ரயில் (06676) அக்டோபர் 15ம் தேதி முதல் நவம்பர் 22ம் தேதி வரை, திங்கட் கிழமைகள்  தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

இது போல பாலக்காடு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16731) தாழையூத்து திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மின்தடம் மாற்றி அமைக்கும் பணி நிறைவடைந்ததால் இன்று நவ.23ம் தேதி சனிக்கிழமை முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையே அனைத்து ரயில்களும் வழக்கம்போல இயக்கப்படுகின்றன.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!