undefined

 திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.07 கோடி... 1.9 கிலோ தங்கம்!

 
 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ.4.07 கோடி மற்றும் 1.9 கிலோ தங்கம் கிடைத்துள்ளன.


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி, நவம்பர் மாதம் 26, 27 ஆகிய இரு நாள்கள் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இப்பணியில், சிவகாசி பதினெண் சித்தா் மடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக் குழுவினா், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சனேயா் உழவார பணிக் குழுவினா் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.


இதில், ரொக்கம் ரூ.4 கோடியே 7 லட்சத்து 32 ஆயிரத்து 912, ஒரு கிலோ 908 கிராம் தங்கம், 21 கிலோ 100 கிராம் வெள்ளி, 26 கிலோ 100 கிராம் பித்தளை, 1.5 கிலோ செம்பு, 6 கிலோ 300 கிராம் தகரம் மற்றும் 1,234 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!