undefined

  திருச்செந்தூர் கோவில் யானையை புத்தாக்க முகாமுக்கு அனுப்ப முடிவு!

 


 
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் கோவில். இந்த கோவில் யானை  தெய்வானை தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில், யானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.  சுவாமி வீதி உலா காலங்களில்  முன்பாக சென்று வரவும், மற்ற நேரங்களில் கோவில் முன்பாக நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்கவும்  இந்த யானை ஈடுபட்டு வந்தது. யானை பராமரிப்பு பணியில் பாகன்கள் செந்தில், ராதாகிருஷ்ணன் இருவரும்  ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுடன் உதவி பாகனாக திருச்செந்துார் வ.உ.சி., தெருவைச் சேர்ந்த உதயகுமார், 46, இருந்து வந்தார்.நேற்று பிற்பகலில் யானை கட்டிய மண்டபத்திற்கு உதயகுமார்,  கன்னியாகுமரி மாவட்டம், பழுகல் பகுதியில் வசித்து வரும்  சிசுபாலன்  இருவரும் சென்றுள்ளனர். மண்டபத்திற்குள் வெளியாளான  சிசுபாலன் நுழைந்து யானையுடன் செல்பி எடுத்துள்ளார்.  ஆக்ரோஷமான யானை, திடீரென அவரை தாக்கியது.


பாகன் உதயகுமார் யானையை கட்டுப்படுத்த முயற்சி செய்ததில்  துதிக்கையால் துாக்கி வீசியதில்  இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து  திருச்செந்துார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து, மண்டபத்திற்குள் வைத்து யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானையின் குடில் அருகில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. யானை தெய்வானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 'யானை உணவு சாப்பிடவில்லை, தண்ணீர் குடிப்பதுடன் இலைகளை மட்டுமே உண்கிறது என பாகன் தெரிவித்துள்ளார். யானை தெய்வானையின் குடிலைச் சுற்றி தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளன.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!