undefined

 மிரட்டல்... தஹ் லைப் டீசர் வெளியீடு... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

 

 உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை சிறப்பிக்கும் வகையில் அவரது நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி டீசர் இன்று வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, டில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது. தக் லைஃப் - கமல்ஹாசன் நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளனர்.

இந்தப்  படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!