undefined

3 பேர் கொடூர கொலை... குற்றவாளிகளைப் பிடிக்க  5 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக காவல் ஆணையர் தகவல்!

 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 3 பேர் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பேட்டியளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் தெய்வசிகாமணி, அலமாத்தாள் ஆகிய தம்பதியினர் தங்களது தோட்டத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில், அங்கேயே வீட்டில் வசித்து வந்துள்ளனர். 

இவர்களது மகன் செந்தில்குமார் கோவையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் தனது மனைவி கவிதா, மகன் மற்றும் மகளுடன் கோவையில் வசித்து வருகிறார். 

செந்தில்குமார் தனது தாய் தந்தை வசிக்கும் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், நேற்றிரவு மர்ம நபர்கள் தெய்வசிகாமணியின் தோட்டத்து சாலைக்கு வந்ததாகவும் தெய்வசிகாமணியை தோட்டத்தில் வைத்து வெட்டியதாகவும், அதை தடுக்கச் சென்ற அவரது மனைவி அலமாத்தாள் மற்றும் மகன் செந்தில்குமார் ஆகியோரையும் கொடூரமான முறையில் வெட்டி கொலைச் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

இன்று காலை தெய்வசிகாமணியின் வீட்டிற்கு வந்த சவரத் தொழிலாளர் ஒருவர் மூன்று பேரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்  உடனடியாக இது குறித்து அவிநாசி பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவிநாசி பாளையம் காவல்துறையினர் மற்றும் பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான காவல்துறையினர் தடையவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் கொலை நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் நகை பணம் திருடு போயிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருப்பூர் மாநகர காவல் ஆணையர் கூறியதாவது; பல்லடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஒரு நபர் செய்திருக்க வாய்ப்பில்லை. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 8 சவரன் நகை திருடுபோனதாக தகவல் தெரிவித்துள்ளனர். அனைத்து பகுதியிலும் வாகன சோதனை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!