undefined

கடன கட்ட வழியில்ல...   ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, 15 வயது மகள் தற்கொலை...  !   

 
ஜனனி


 
சேலம் மாவட்டம் அரிசி பாளையம், முத்தையாளர் தெருவில் வசித்து வருபவர்  45 வயது பால்ராஜ்.   இவர் வெள்ளி தொழில் புரிந்து வருகிறார். இவரது மனைவி ரேகா, 15 வயது மகள் ஜனனி. இவர் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்றதாக தெரிகிறது.  கடந்த சில மாதங்களாகவே இவர் செய்து வந்த வெள்ளித் தொழில் நலிவடைந்ததால் சரிவர கடன் செலுத்த இயலவில்லை.

ஆம்புலன்ஸ்

அதே நேரத்தில்  வங்கியில் இருந்து கடனைத் திருப்பி அடைக்குமாறு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மன உளைச்சல் அடைந்து மூவரும் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து   போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!