ஏரியில் மூழ்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி... பெரும் சோகம்!
தமிழகத்தில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டை ஏரியில் அந்தப் பகுதியில் வசித்து வருபவர்கள் துணி துவைப்பது வழக்கம். அதே போல் 2 பெண்கள் உட்பட 3 பேர் துணி துவைக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கியதாகத் தெரிகிறது.
அவர்கள் மூழ்க தொடங்கியதும் அலறி கூச்சலிட்டனர். இவர்களை காப்பாற்றுவதற்காக அப்பகுதியை சேர்தவர்கள் வருவதற்குள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் மூழ்கி உயிரிழந்த ரேவதி, சிவஸ்ரீ, திவ்ய தர்ஷினி ஆகிய 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!