கத்தியைக் காட்டி மிரட்டல்... ஐடி ஊழியரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி!
Nov 16, 2024, 08:32 IST
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே ஐடி நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் பணம் வழிபறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் ஐடி நிறுவன ஊழியரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.2 லட்சம் பறித்த பகல் கொள்ளையர்களான திருநெல்வேலியை சேர்ந்த லட்சுமணன்(30), மேலபட்டாளம் பகுதியை சேர்ந்த கொட்டியப்பன்(35), திருநெல்வேலி கிருஷ்ணபுரத்தை சேர்ந்த அஸ்வின்(20) ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.