பெற்ற தாயைத் தாக்கி கொலை மிரட்டல்... அதிர வைத்த மகன்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பணம் தராத ஆத்திரத்தில் தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஆர்.சி வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யாக்குட்டி மனைவி வேம்படிபேச்சி (65). இவர்களுக்கு ராதாகிருஷ்ணன் (45) உள்பட 4 மகன், 2 மகள் உள்ளனர். இவர்களில் ராதாகிருஷ்ணன் தவிர மற்ற 3 மகன்களும்தாய் குடும்ப செலவுக்கு மாதந்தோறும் பணம் வழங்கி வந்துள்ளனர்.
ராதாகிருஷ்ணன் சரிவர வேலைக்கு செல்லாமல் பணம் கொடுக்க மறுத்து வந்ததுடன் தாயிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு கொடுப்பாராம். இந்நிலையில் நேற்று வேம்படிபேச்சி, அவரது சகோதரி இசக்கியம்மாள் நடத்திவரும் கடை அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராதாகிருஷ்ணன், தனது தாயிடம் செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர், தாய் என்றும் பாராமல் வேம்படி பேச்சியை தாக்கி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில்சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது”. இது குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்கு பதிந்து ராதாகிருஷ்ணனை கைது செய்தார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!