போராட்டத்தில் குதித்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள்.. தீப்பந்தங்களுடன் மெகா பேரணி.!

 

ஆசிரியர்களுக்கான கட்டாயத் தகுதித் தேர்வு அறிவிப்பை எதிர்த்து பீகாரில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தீப்பந்தங்களுடன் பேரணி நடத்தினர். இதனால் அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்வித் திணைக்களத்தின் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதன்படி இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெகனாபாத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தீப்பந்தங்களை ஏந்தி ஊர்வலம் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ​​ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்ற அறிவிப்பை  திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!