undefined

ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்... சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில் தீ மிதிவிழா துவங்கியது!

 
இன்று அதிகாலை 4 மணிக்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அமைந்திருக்கும் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா துவங்கியது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்தும் குவிந்தனர். உள்ளூர் மக்களும் கலந்துக் கொள்ளும் வகையில் இன்று ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

ஒவ்வொரு வருடமும், சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெறும். தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டு இந்த விழாவில் குண்டத்தில் இறங்கி தீ மிதிப்பார்கள்.

கடந்த 11-ம் தேதி இந்த ஆண்டு திருவிழா பூச்சாற்றுடன் தொடங்கியது. கடந்த 19-ம் தேதி கம்பம் சாட்டுதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து இன்று 26-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதிக்கும் விழா துவங்கியது. 

உள்ளூர் மக்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள வசதியாக உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தியில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் வருகிற 26-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதிக்கும் விழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறும் என்றும், உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 30-ம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்