உஷார் ....இந்த பாதிப்பு இருக்கறவங்க காலிஃப்ளவரை சாப்பிடாதீங்க..!!

 

கத்தரிக்காய், வெண்டைக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் என நாட்டுக்காய்கறிகளைப் பெரும்பாலும் மறந்துவிட்டோம். காரட், காலிஃப்ளவர், பெர்ப்பிள் கோஸ், புரோக்கோலி என வெளிநாட்டு காய்கறிகளில் விதவிதமான டிஸ்கள் செய்து சாப்பிடுவதை பெருமிதமாக எடுத்துக்கொள்ள தொடங்கிவிட்டோம். அந்த வகையில் கோபி 65, கோபி மஞ்சூரியன்களுக்கு பிரியர்கள் அதிகம். காலிபிளவர் விரும்பிகள் பலர். இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.அதனால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கிறது ஒரு ஆய்வறிக்கை.   
காலிஃபிளவரில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது என்றாலும் மிக மிக கலோரி குறைந்த ஒரு காய்கறியாகும்.  

எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் காலிஃபிளவரை பலரும் சாப்பிடலாம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப அதை வைத்துக் கொள்ள வேண்டும்.   காலிஃபிளவரில் ரஃபினோஸ் என்ற மிக மிக கடினமான ஒரு குளுக்கோஸ் இருக்கிறது. இதனை பெருங்குடலால் அவ்வளவு எளிதாக செரிமானம் செய்ய முடியாது. எனவே வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் இதை ஃபெர்மன்ட் செய்து, பிறகு செரிமானம் ஆகும். இதனால்  காலிஃபிளவர் அதிகமாக சாப்பிடும் பொழுது  வயிறு உப்பசம் மற்றும் வாயுத்தொல்லை ஏற்படலாம்.   


தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் இதனை அதிகம் சாப்பிட்டால் வளர்சிதை மாற்றம் மிகவும் குறைந்துவிடும். எனவே நாள் முழுவதும் சோர்வாக இருக்க நேரிடும். இவர்கள் காலிஃபிளவர் முட்டைகோஸ்  உணவுகளை முழுவதுமாக தவிர்த்து விட வேண்டும்.  இந்த உணவுகள் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை இன்னும் மந்தமாக்கிவிடும்.
 அடிக்கடி அலர்ஜியால் அவதிப்படுபவர்கள்   காலிஃபிளவரை தவிர்த்து விட வேண்டும்.

ஒரு சிலருக்கு இதை சாப்பிட்டால் உடனடியாக சருமத்தில் அலர்ஜி, வீக்கம், அல்லது மூச்சு திணறல் ஏற்படலாம்.   காலிஃப்ளவரில் வைட்டமின் கே என்ற வைட்டமின் இருக்கிறது.   ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் காலிஃபிளவரை அதிகமாக சாப்பிடக்கூடாது. இந்த மருந்தை உட்கொள்பவர்கள் அதிக அளவு காலிஃபிளவரை சாப்பிட்டால் பிளட் கிளாட் ஏற்பட்டு அது உயிருக்கே ஆபத்தாக விளையும். 
காலிஃப்ளவர் சாப்பிட்டால்  பசி எடுக்காமல் வயிறு மந்தமாக இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். ஏற்கனவே எடை மெலிந்து இருப்பவர்கள் அல்லது எடை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் உணவியல் நிபுணர்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை