தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும்... மாப்பிள்ளையூரணி பகுதி மக்கள் கோரிக்கை!
மாப்பிள்ளையூரணி ஊராட்சியினை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாப்பிள்ளையூரணி பெரிய செல்வம் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் அமைந்துள்ள பெரிய செல்வம் நகரில் சுமார் 250 குடும்பங்களும் மற்றும் 1000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். எங்கள் ஊரில் மொத்தம் 11 தெருக்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட குறுக்கு தெருக்களும் உள்ளது.
கடந்த வருடம் 2023 டிசம்பர்மாதம் வந்த பெரும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி எங்கள் ஊர்தான். பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் வசதி. சாலை வசதி, தெரு விளக்கு பிரச்சனை புதிதாக தண்ணீர் நீர் தேக்க தொட்டி பணி நிறைவடையாமல் உள்ளது மேலும் இன்னும் பல பிரச்சனைகள் நிறைவடையாமல் உள்ளது.
வீட்டு குப்பையை அகற்ற தூய்மை பணியாளர்கள் வாரத்திற்கு ஒரு முறைதான் குப்பை வண்டியை எங்கள் ஊருக்கு கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் குடிநீர் அருந்த ஒரு குடம் 10ரூ என்று விலைக்கு குடிதண்ணீரை வாங்கும் நிலையில் உள்ளோம். நேரு காலனி, பதின்மய பள்ளி, இரத்த கோட்டை சபை. இராஜபாளையம் ஆகிய ஊர்களுக்கு செல்ல எங்கள் பெரிய செல்வம் நகர் வழியாக தான் செல்லும் பிராதான சாலை சுமார் 15 வருடங்களுக்கு மேலாக ஆகியும் கடந்த வருடம் வந்த வெள்ளத்தல் இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது.
இதுவரை இன்னும் புதிதாக தார் சாலை அமைத்து கொடுக்கவில்லை. புதிதாக தார்சாலை வசதி நல்ல குடிதண்ணீர் வசதி, தெரு விளக்கு சரிபார்த்தல், குப்பை வண்டி பிரச்சனை வீட்டுக்கு வீடு பைப்பு லைன் கொடுத்தும் குடிதண்ணீர் வரவில்லை இதில் பெரும்பாலான வீடுகளில் பைப்புகளை அறுத்து (Dummy) போடப்பட்டுள்ளது. பெரிய செல்வம் நகர் 4வது தெருவில் உள்ள குறுக்கு தெருவில் பேவர் ப்ளாக் கல் அமைக்கும் பணி முழுவதுமாக நிறைவு பெறாமல் பாதியில் கைவிடப்பட்டது.
தெரு பைப்புகளில் 15 நாள்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. இதனால் மக்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சுமார் 60க்கும் மேற்ப்பட்ட ஊர்கள் உள்ளது. எங்கள் ஊரில் உள்ள பிரச்சனைத்தான் மற்ற ஊர்களுக்கும் உள்ளது. இது போன்ற பிரச்சனைகளுக்கு மாப்பிள்ளையூரணி கிராம ஊராட்சி கட்டுப்பாட்டில் இருந்தால் தீர்வு காண முடியாது. எனவே மக்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!