சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரங்களுக்கு அமோகமான வாழ்க்கை!
இந்தியா முழுவதும் நவராத்திரி கொண்டாட்டங்களுக்காக தயாராகி வருகின்றனர். நவராத்திரிக்கு பிறகு சுக்கிரன் தனது சஞ்சாரத்தை துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாற்றுகிறார். சுக்கிரப்பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் பெரிய அளவில் மாற்றங்கள் உருவாகலாம் என்கின்றனர் ஜோதிட வல்லுனர்கள் அந்த வகையில் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்கள் மட்டும் அட்டகாசமான அமோகமான வாழ்வை பெற போகின்றனர். பொதுவாக சுக்கிர பலம் பெற்றவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், உற்சாகமும் கரை புரண்டு ஓடும். சுக்கிரப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் ஆசீர்வாதம் பெற்றவர்களாய் உணர்வார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே சுக்கிரப் பெயர்ச்சியால் அமோகமான உற்சாகமான நாட்களை பெறப் போகிறீர்கள். குழந்தைக்காக ஏங்கிக் கிடந்தவர்கள் குழந்தை வரம் பெற்றவர்களாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நண்பர்களுடன் உறவுகள் மேம்படும்.
மீனம் :
மீன ராசிக்காரர்களே சுக்கிரப்பெயர்ச்சியால் தொழிலில் மேம்பாடு அடையலாம். பணியிடத்தில் பதவி உயர்வு, பாராட்டுக்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகள், உழைப்புக்கான ஆதாயங்களை பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் மேம்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, சுக்கிரப்பெயர்ச்சியால் உற்சாக வாழ்வை வரமாக பெறப் போகிறீர்கள். நீண்ட காலமாக இழுபறியில் இருந்த சொத்து தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சுபகாரியங்கள் கைகூடும். புதிய முயற்சிகளில் மேன்மை பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, சுக்கிரனின் பெயர்ச்சியால் உறவுகள் பலப்படும். குடும்பத்தில் குதூகலம், கொண்டாட்டம் அதிகரிக்கும். உடன் பிறப்புக்களால் ஆதாயம் பெறுவீர்கள். புதிய முயற்சிகளால் தொழில் மேம்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே சுக்கிரப்பெயர்ச்சியால் மன நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். வாழ்வில் முன்னேற்றம் பெருகும். பொன், பொருள், ஆபரணச்சேர்க்கை உண்டு. பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள்
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே சுக்கிரப்பெயர்ச்சியால் கவலைகள் நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த வாராக்கடன்கள் வீடு தேடி வந்து வசூலாகும்.புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உருவாகும் . வெளியூர் பயணங்கள் மூலம் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!