ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 4வது முறையாக நிலநடுக்கம்.. அச்சத்திலே வாழும் மக்கள்..!

 
ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 4வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிகாலை 1.09 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய அண்டைநாடுகளிலும் உணரப்பட்டது. இந்நிலநடுக்கம் தஜிகிஸ்தானில் இருந்து 33 கி.மீ. தூரத்தில் 150 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

கடந்த 11ஆம் தேதி ரிக்டர் அளவில் 6.1 வரை பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பின், 13ஆம் தேதி ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 வரை பதிவானது. 15ஆம் தேதி 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானை உலுக்கியது.தொடர்ந்து இந்த மாதத்தில் 4வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் ஆப்கானிஸ்தான் மக்கள் பதற்றத்தில் வாழ்ந்து வருகின்றனர்.