மார்கழி மாத குளிருக்கு சளி, இருமலை விரட்ட இதை செய்தாலே போதும்!
மார்கழி மாத குளிர் காலங்களில் சளி, இருமலை விரட்ட இதைச் செய்து வந்தாலே போதும். வருஷா வருஷம் இயற்கை கால நிலைகள் மாறி வருகின்றன. வழக்கத்தை விட இந்த வருஷம் குளிர் அதிகம் இருக்கிறது என்று ஒவ்வொரு வருடமும் மக்கள் புலம்புகின்றனர். டெல்லி போன்ற மாநகரங்களில் குளிரோ, மழையோ, வெயிலோ எல்லாமே அந்தந்த சீசனனில் அதிகம் தான் இருக்கும். அதே போல தான் தமிழகம் மாறி வருகிறது.
மழை பெய்தால், அதிகனமழை. மழை பொய்தால் வறட்சி. இந்நிலையில், இந்த குளிர் காலத்தை சமாளிக்க தவறான புதினாவை சேர்த்துக்கோங்க. சளி, இருமல், மூக்கடைப்பு வராமல் நம்மை காத்துக் கொள்வது எப்படி என்று இந்தப் பதிவில் காணலாம்.
குளிர் காலமாக இருந்தாலும், உடலில் வெப்பம் அதிகரிக்கும். ஏனெனில் குளிர் காலத்தில் வழக்கத்தை விட நாம் குறைவாகவே தண்ணீரை அருந்துகிறோம். யார் என்ன சொன்னாலும், மசாலா உணவுகளையும், அசைவ உணவுகளையும், பாஸ்ட் புட் உணவுகளையும் நாம் மறக்கப் போவதில்லை. இவை எல்லாமே உடலுக்கு தீங்கு தான்.
அந்த கழிவுகளை வெளியேற்றுவதிலும் புதினா பெரும் பங்கு வகிக்கிறது. உடலின் வெப்பத்தை தாக்குப் பிடிக்க நீர் அதிகம் அருந்துவது மிகவும் நல்லது. நீர்ச்சத்து குறைந்தால்கூட மூக்கில் அடைப்பு ஏற்படலாம். உடலில் நீர்ச்சத்து போதிய அளவு இல்லையெனில் கண் எரிச்சல், மூக்கு அடைப்பு, வீக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
புதினாக் கீரையை தினசரி உணவில் சேர்த்து வர வறட்டு இருமல், இரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி, தலைவலி, நரம்பு வலிகளிலிருந்து நிவாரணம் பெற முடியும். சூட்டினால் வரும் தலைவலிக்கு புதினாக் கீரையை அரைத்து நெற்றியில் பற்று போடுவது பலன் தரும்.
புதினா இலைகள் சேர்த்த தேநீரைக் காலை வேளையில் தினசரி குடித்து வரலாம். அல்லது வெந்நீரில் புதினா இலைகளைப் போட்டு ஆவி பிடிக்கலாம். புதினாவின் நறுமணம் மூக்கு மற்றும் காதுகள் வழியாக சென்று அடைப்பை சரி செய்வதுடன் புத்துணர்ச்சியோடும் இயங்கச் செய்கிறது. ஜீரண சக்தியையும் அதிகரிக்கவல்லது புதினா.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!