’ சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்’.. பிரதமர் மோடி அறிவிப்பு!
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, திருவள்ளுவர் கலாச்சார மையம் குறித்து அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் தெரிவித்தார். மேலும், உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்ற பாஜகவின் மக்களவைத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சிங்கப்பூரில் முதல் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட உள்ளது. .
இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்த யோகா, ஆயுர்வேதம், இந்திய மொழிகள், பாரம்பரிய இசை ஆகியவற்றை உலகுக்கு எடுத்துச் சென்று பயிற்சி அளிக்கும் வகையில் உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்களை ஏற்படுத்துவோம் என கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜனநாயகத்தின் தாயாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் வளமான ஜனநாயக மரபுகளை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!