undefined

 ‘என் புருஷனைக்  கொன்னுட்டாங்க; அப்பாவுக்கு கடுமையான தண்டனை தாங்க’ கெளரவ கொலை வழக்கில் கதறிய ஹரிதா!

 
 

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த 2020ல் கேரளாவை உலுக்கிய தென்குறிச்சி கெளரவ கொலை வழக்கில், பாலக்காடு கூடுதல் செஷன்ஸ் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்நிலையில், ஹரிதாவின் தந்தை பிரபுகுமார் (50), மாமா சுரேஷ் (48) ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், கணவர் அனீஷ் கொலையில் குற்றவாளிகளான தனது தந்தைக்கும், மாமாவுக்கும் கடுமையான தண்டனைத் தர வேண்டும் என்று அனீஷ் மனைவி ஹரிதா கதறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், அனிஷீன் வீட்டைக் கண்காணித்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்திற்காகக் காத்திருந்து, துல்லியமாக திட்டமிட்டு அனீஷைக் கொலைச் செய்துள்ளனர். கேரளம் திருவனந்தபுரம் அருகே உள்ள மங்களபுரம் பகுதியில் திட்டமிட்ட வன்முறை சம்பவம் நடந்தது கேரளா முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தி பரபரப்பாக பேசப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டதற்காக ஹரிதா மீது ஏற்பட்ட ஆழமான வெறுப்பால் ஹரிதாவின் தந்தையும் மாமாவுமான பிரபு குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர் இந்த கொலையை திட்டமிட்டு செய்துள்ளனர் என்று அரசு தரப்பு வாதிட்டது. 

இந்த வழக்கில் சுரேஷ் முதல் குற்றவாளியாகவும், 2வது குற்றவாளியாக பிரபுகுமார் சேர்க்கப்பட்டுள்ளார். கணவரை இழந்ததால் மனமுடைந்த ஹரிதா, “எனது அனீஷேட்டனை இரக்கமின்றி கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். நீதிமன்றம் நீதி வழங்க வேண்டும்” என்று கதறினார். இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 25, 2020 அன்று நடந்தது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மாலையில் ஒரு தெருவில் பதுங்கியிருந்து அனீஷை கூரிய ஆயுதங்களால் தாக்கினர். அனிஷ் மற்றும் ஹரிதா திருமணம் முடிந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த கொடூரமான செயல் நடந்தது, இது ஏற்கனவே அவரது குடும்பத்தினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது. அனீஷ் கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களில் குற்றவாளிகளால் பலமுறை கொலைச் செய்யப்பட இருப்பதாகவும் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் உள்ளூர் காவல்துறையினரால் இது குறித்து விசாரிக்கப்பட்ட நிலையில், அனிஷின் குடும்பத்தினர் மற்றும் ஹரிதாவின் கூற்றுகளைத் தொடர்ந்து வழக்கு மாவட்ட குற்றப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டது. ஹரிதாவின் தந்தையிடம் இருந்தும், உறவினர்களிடம் இருந்தும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துக் கொண்டிருந்த போதிலும் உள்ளூர் காவல் துறை அதிகாரிகள் அனிஷுக்கு போதுமான பாதுகாப்பை வழங்கத் தவறி விட்டனர் என்றுக் கூறப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.