undefined

‘போதையில என்னை கொலைச் செய்ய பார்த்தாங்க...’ நடிகர் டிடிஎஃப் வாசன் அதிர்ச்சி பேட்டி!

 

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சிறிய ஓடையில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது, ​​போதையில் இருந்த சிலர் இங்கு குளிக்கக் கூடாது எனக் கூறி கத்தியால்தன்னைக் குத்தி கொல்ல முயன்றதாக டிடிஎஃப் வாசன் தெரிவித்தார்.

கோவையை சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். பிரபல பைக் ஓட்டுநரான இவர், யூடியூப்பில் பைக் ஓட்டும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். யூடியூப்பில் மில்லியன் கணக்கான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் குறிப்பாக 2K கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தொடர்ந்து விதிமீறல்களால் டிடிஎஃப் வாசனின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து பைக் சாகச வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து வரும் டிடிஎஃப் வாசன் அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குகிறார். சமீபத்தில் இவர் திருப்பதியில் உள்ள கோவிலுக்கு சென்றபோது பக்தர்களை கிண்டல் செய்து பிரச்சனையில் சிக்கினார். அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் டிடிஎஃப் வாசன் தற்போது பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குடிபோதையில் தன்னை சிலர் கத்தியால் குத்தி கொல்ல முயன்றதாக அவர் கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சிறிய ஓடையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது, ​​போதையில் பேசிக் கொண்டிருந்தவர்கள் தன்னை இரும்பு கம்பியால் குத்தியதாகவும், லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் என் உயிர் காப்பாற்றப்பட்டது. இதனால் தான் இன்று உங்கள் முன் பேசுகிறேன். நான் உயிருடன் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி என்று அந்த வீடியோவில் டிடிஎஃப் வாசன் கூறியுள்ளார்.. இதுதொடர்பான வீடியோவையும் டிடிஎஃப் வாசன் வெளியிட்டுள்ளார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா