undefined

இவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை... வாய்ப்புகளை நிராகரிக்காதீங்க... கடன் கொடுத்து ஏமாறாதீங்க!

 

27 நட்சத்திரங்களில், இந்த 6 நட்சத்திர நாளில் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் முழுவதுமே அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதப் போகிறது. கிடைக்கும் வாய்ப்புகளை சரியா பயன்படுத்திக்கோங்க. யாருக்கும் கடன் கொடுத்து ஏமாறாதீங்க.

இந்த நட்சத்திரக்காரர்கள் கொடுக்கிற கடன் தொகை மீண்டும் வசூலாவதில் பெரும் சிக்கல் ஏற்படும். கடனால் உறவுகளை இழக்க நேரிடும். அதனால் கடன் தருவதைத் தவிர்த்திடுங்க. வரபோகும் அதிர்ஷ்டத்தை புத்திசாலித்தனமாக தக்க வெச்சுக்கோங்க. சுப செலவுகளாக மாத்திக்கோங்க. யாருக்கும் கடன் கொடுத்து ஏமாறாதீங்க.

இவர்கள் இதுநாள் வரையில் பட்ட கஷ்டங்கள் தீரப் போகிறது. கடந்த 2024ல் இவர்கள் பட்ட துயரங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நெருங்கிய நண்பர்களால், உறவினர்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டவர்களுக்கு விடிவு காலம் வரப் போகிறது.

ரோகிணி:

2025ம் வருடம் ரோகிணி நட்சத்திரத்தாரர்களுக்கு உரிய அதிர்ஷ்டமான வருடமாக அமையப் போகிறது. வருகிற அதிர்ஷ்டத்தை தவற விடாமல் செல்வத்தைச் சேர்த்துக் கொள்ளுங்க. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபாரத்தில் பெரிய உயரங்களைத் தொட்டு லாபத்தைப் பார்க்கப் போகிறார்கள். 

திருவோணம்:

திருவோண நட்சத்திரகாரர்களுக்கு பொருளாதாரம் நிலை உயரும். புதிய முதலீடுகளால் ஆதாயம் உண்டு. அதிலிருந்து பெரும் லாபத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தோடு புத்திசாலித்தனமும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஆயில்யம்:

ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் இதுவரையில் உழைப்புக்கான பலன் இல்லை என்று கவலைப்பட்டு வந்த நிலை மாறும். வரும் 2025 உங்களுக்கான ஆண்டு. இதை முழுமையாக பயன்படுத்திக்கோங்க. சொந்த தொழில் கைகொடுக்கும். 

அஸ்வினி:

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன உறுதியால் பெரிய சாதனைகளை புரிவார்கள். அதிர்ஷ்டம் தேடி வரும். முன்னோர்களின் சொத்துக்கள் கைவந்து சேரும். வில்லங்கங்கள் விலகும். சகல செல்வங்களையும் பெறுவீர்கள். 

மிருகசீரிஷம்:

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கம் முதலே அவர்கள் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கப் போகிறது. இதுவரை அவர்கள் வாழ்வில் இருந்த அனைத்து விதமான நெருக்கடிகளில் இருந்தும் விடுபடுவார்கள்.

பூசம்:

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செழிப்பும், வளர்ச்சியும் நிறைந்த ஆண்டாக இருக்கும். பணக்கஷ்டம் முழுவதுமாக நீங்கும். நிதிநிலையில் தொடர்ச்சியான முன்னேற்றம் ஏற்படும். தங்களின் வளர்ச்சி மட்டுமின்றி மற்றவர்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும். அவர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தை அடைவார்கள்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!