undefined

பீரோவில் எதுவும் இல்லை.. என்னை மன்னிச்சிடுங்க.. வீட்டுச் சுவரில் எழுதிய திருடன்.. ஷாக்கான வங்கி ஊழியர்!

 

திருச்சி மாவட்டம், பெரம்பலூர் பைபாஸ் செல்வம் நகரில் வசிப்பவர் இளங்கோ. தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இளங்கோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டு.. பின்னர் நேற்று முன்தினம் இரவு தான் வீடு திரும்பினார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது முன்பக்க கேட் மற்றும் கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதேபோல் வீட்டின் போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் திருடப்பட்டது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ​​அறையில் இருந்த மர மேசையும் உடைக்கப்பட்டிருந்தது.

ஆனால், பீரோவில் பணமோ, நகையோ இல்லை.. பீரோவை உடைத்ததால் அறையின் சுவரில், “சாரி சிஸ்டர் (ஆர்) பிரதர்,  மன்னித்து விடுங்கள்” என்று திருடன் க்ரேயனால் எழுதி வைத்திருந்ததை கண்டு இளங்கோ அதிர்ச்சி அடைந்தார்.  இளங்கோ அளித்த புகாரின் பேரில், துறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை