undefined

பெண்கள் என பதிவு செய்யப்பட்டிருந்த 2000 ஆண்கள்.. மெகா மோசடில் ஈடுபட்ட கல்லூரிகள்.. அதிர்ச்சி பின்னணி!

 

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த 3 தனியார் கல்லூரிகளில் சுமார் 2000 மாணவர்கள்  மாணவிகளாக பதிவு செய்யப்பட்டிருப்பதை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டறிந்துள்ளது. மேஜர் அங்கத் சிங் மகாவித்யாலயா, SBD அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி மற்றும் குல்கண்டி லாலாராம் மகாவித்யாலயா ஆகிய மூன்று கல்லூரிகளிலும் முறைகேடுகள் நடந்ததாக பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்தார்.

இந்த 3 தனியார் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வு கடந்த நவம்பர் 21ம் தேதி முதல் நடந்து வருகிறது.மேலும் மாணவிகளை விட மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது. சில தேர்வு அறைகள் ஆண் மாணவர்களால் மட்டுமே நிரம்பியிருந்தன. அதிக எண்ணிக்கையிலான பெண் மாணவர்களைக் கொண்ட கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த பல்கலைக்கழகம் அனுமதித்துள்ளது.

மேலும், கல்லூரி நிர்வாகம் தங்கள் கல்லூரி ஊழியர்களை செமஸ்டர் தேர்வுகளில் கண்காணிப்பாளர்களாக நியமிக்கலாம். எனவே, மாணவிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, கல்லூரி நிர்வாகிகள் மோசடியில் ஈடுபடுகிறார்களா என, பல்கலை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!