undefined

எந்த பதிலும் வரல.. தேர்தல் ஆணையத்துக்கு போன  பகுஜன் சமாஜ் கட்சி.. தவெக கொடி கட்சிக்கு கடும் சிக்கல்!

 

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், நேரடி அரசியலுக்கு வந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், சமீபத்தில் கட்சிக் கொடி மற்றும் கட்சிப் பாடலை அறிமுகப்படுத்தினார். 2026 சட்டசபை தேர்தலே இலக்கு என அறிவித்து படிப்படியாக கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி, தற்போது அக்கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் கட்சியின் மாநில மாநாட்டையும் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (டிவிகே) கொடியில் இருக்கும் யானை சின்னத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. த.வெ.க கொடியில் உள்ள யானை சின்னம் தங்கள் கட்சியின் சின்னத்தை ஒத்திருப்பதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். த.வெ.க  கொடியில் உள்ள யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய சின்னமான யானை சின்னத்தின் நேரடி நகல் என்றும், தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்றும் பகுஜன் சமாஜ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதனால், த.வெ.க  யானை சின்னத்தை உடனடியாக கொடியில் இருந்து அகற்ற வேண்டும், இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து த.வெ.க  தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து உரிய முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை