உரிய வசதி இல்லை.. இறந்த மகன்களின் உடலை 15 கி.மீ தூரத்திற்கு தூக்கிச் சென்ற அவலம்.. அதிர்ச்சி பின்னணி!
மகாராஷ்டிராவில் உள்ள கட்சிரோலி மாவட்டம் பழங்குடியின மக்கள் மற்றும் நக்சலைட்டுகளின் தாயகமாகும். மாவட்டத்தின் பெரும்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். இக்காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லை. கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள பட்டிகாவ் என்ற இடத்தில் வசிக்கும் தம்பதியின் இரண்டு மகன்களும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தனர். பெற்றோர், மகன்களை 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு மகன்களும் உயிரிழந்தனர். இதனால் மகன்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர்.
ஆனால் ஆம்புலன்ஸ் வசதியோ, டாக்ஸியில் செல்ல பணமோ இல்லை. இதனால் கணவன்-மனைவி இருவரும் மகன்களை தோளில் தூக்கிக்கொண்டு சொந்த ஊருக்கு நடக்க ஆரம்பித்தனர். துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் கீழ் மாவட்டமான கட்சிரோலியில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு 15 கிமீ நடைப்பயணமாக தம்பதியினர் தங்கள் மகன்களின் உடலை எடுத்துச் சென்றனர். அவர்கள் தங்கள் மகன்களின் உடலை தோளில் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் கிராமம் காட்டுக்குள் உள்ளது.
மழைக்காலம் என்பதால் ஊருக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக இருந்தது. அடிக்கடி மழை பெய்தது. அதை பொருட்படுத்தாமல் மகன்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். எதிர்க்கட்சித் தலைவர் விஜய் தம்பதியினர் தங்கள் மகன்களின் உடலை சுமக்கும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "சகோதரர்கள் இருவரும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை. இரண்டு மணி நேரத்தில் உடல்நிலை மோசமடைந்தது. ஒரு மணி நேரத்தில் இருவரும் இறந்தனர். இருவரது உடலையும் எடுத்துச் செல்ல பெற்றோருக்கு ஆம்புலன்ஸ் கூட இல்லை.
பெற்றோர்கள் தங்கள் மகன்களின் உடல்களுடன் 15 கிலோமீட்டர் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கட்சிரோலியின் சுகாதார அமைப்பு மோசமாக உள்ளது என்பது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்சிரோலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் தர்மராவ் ஆகியோர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாநிலத்தை எப்படி மேம்படுத்தப் போகிறோம் என்று கூறி வருகின்றனர்.
கட்சிரோலிக்கு சென்று உண்மையான கள நிலவரத்தை பாருங்கள். ஒரு வாரத்தில் விதர்பாவில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். அமராவதி மாவட்டத்தில் உள்ள தாகேந்திரி கிராமத்தில் கடந்த 1ம் தேதி கவிதா என்ற பழங்குடியின பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அரசு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர 4 மணி நேரம் ஆகும் என்றார்கள். இதனால் அவர்களுக்கு வீட்டிலேயே பிரசவம் நடந்தது.
இதில் அந்த பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடந்தது. பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது. கவிதாவை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கிருந்து அமராவதிக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினர். இதன் காரணமாக இருவரும் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக தாயும் குழந்தையும் உயிரிழந்தனர். மோசமான சுகாதார வசதியால் இந்த நிலை ஏற்பட்டது. 1500 கொடுத்து ஓட்டு கேட்கிறது அரசு. ஆனால் இங்கு ஆம்புலன்ஸ் இல்லை,'' என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!