undefined

 

"பணம் கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு கிடையாது" - ஜெயக்குமார் ஆவேசம்

 

பணத்தை கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்கள் டிசம்பர்  5ம் தேதி மறைந்தது தமிழர்களுக்கு பேரிடியாக அமைந்தது. அவரது நினைவு நாளான டிசம்பர் 5ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜெயலலிதா நினைவிடத்திற்கு நினைவஞ்சலி செலுத்த உள்ளோம். காலை 9.30 மணியளவில் இருந்து 11 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கு காவல்துறையினரிடம் அனுமதியும் பாதுகாப்பு உள்ளிட்ட சட்ட ரீதியான அனுமதி வழங்க கோரி மனு அளித்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார் என்றார்.  

உதயநிதி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், “பணத்தை கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. அதிமுகவை தேடி தான் கூட்டணிக்கு வருவார்கள். ஜெயிக்கும் குதிரையில் தான் பந்தயம் கட்டுவார்கள்” என்றார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!