சாப்பாட்டுக்கு பணமில்லை.. மூன்று வேளையும் பைக் ஆயில் தான் உணவு.. பகீர் கிளப்பும் மெக்கானிக்!
கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதியைச் சேர்ந்த 45 வயதான குமார், சிறுவயதிலிருந்தே தனக்கு கிடைத்த எந்த வேலையையும் செய்து வந்தார். பின்னர் மெக்கானிக் தொழில் கற்றுக் கொண்டு கடைகளில் வேலை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால், சிறு வயதில் பசித்தபோது, சாப்பாட்டுக்குப் பணமில்லாததால் வாகனத்திற்கு பயன்படுத்திய பழைய மோட்டார் ஆயிலைக் குடிக்க ஆரம்பித்தார்.
நாளடைவில் குமாருக்கு பழைய ஆயிலைக் குடிப்பது பழக்கமாகிவிட்டது. இது குறித்து அவர் கூறுகையில், “நான் ஆயிலைக் குடிப்பதை சிலர் அதிசயமாக பார்க்கின்றனர். பலமுறை நேரடியாகக் அவர்களிடம் ஆயிலைக் குடிப்பதை காண்பித்தேன். இதைப் பார்த்த சிலர் எனது நிலைமையைப் புரிந்து கொண்டு எனக்கு உதவி செய்ய பணம் கொடுத்தனர். கடந்த 25 ஆண்டுகளாக இரு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் ஆயிலை தொடர்ந்து மூன்று வேளையும் குடித்து வருவதாகவும், உணவு, குடிநீர் எதுவும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
அதேபோல், கடந்த 13 ஆண்டுகளாக சபரிமலைக்கு நடைபயணம் மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்யுமாறு காவல்துறையினரிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!