undefined

தவெக கொடியில் யானையை பயன்படுத்த தடை இல்லை... தேர்தல் ஆணையம்  பதிலடி!

 

 தமிழகத்தில் நடிகர் விஜய் தவெக அரசியல் கட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கினார். இந்த கட்சிக் கொடியில் யானை உருவம் இடம் பெற்று இருந்தது. இதற்கு  தங்கள் கட்சியின் சின்னம் என பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருந்ததது. அத்துடன்  தேர்தல் ஆணையத்தில் புகாரும் செய்திருந்தது.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு தேர்தல் ஆணையம் பரபரப்பு பதிலளித்துள்ளது.  தவெகவின் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் 27 ம் தேதி  நடைபெற உள்ளது.  விஜய்யின் கட்சிக் கொடியில் இடம் பெற்று இருந்த யானை சின்னம், தங்கள் கட்சியின் சின்னம் என பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

 

யானை சின்னத்தை நீக்காவிட்டால் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க போவதாக கூறியிருந்த பகுஜன் சமாஜ் கட்சி இதுகுறித்து  புகாரும் அளித்தது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு  தேர்தல் ஆணையம்  “கட்சியின் கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. தேர்தல் நேரத்தில் கட்சியின் சின்னமாக யானையை தவெக பயன்படுத்த முடியாது. ஒரு கட்சியின் கொடிக்கு நாங்கள் ஒப்புதல், அங்கீகாரம் வழங்குவது இல்லை" எனத்  தெரிவித்துள்ளது.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை