அமெரிக்கவில் பெரும் பரபரப்பு.. இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு!
அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ம் தேதி மாலை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி அலுவலகத்தில் இந்திய தூதரக அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் அறிந்த அப்பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பில் தூதரக அதிகாரி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய தூதரக அதிகாரியின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவதாக போலீசரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இறந்தவர்கள் தொடர்பான கூடுதல் விவரங்கள் குடும்பத்தினரின் தனியுரிமையை கருத்தில் கொண்டு வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!