undefined

 நடிகை சீதா வீட்டில் திருட்டு.. .பரபரப்பு!

 

 80களில் தனக்கென தனிமுத்திரை பதித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நடிகை சீதா. இவர் நடிகர் பார்த்திபனின் முன்னாள் மனைவி. சென்னையில் நடிகை சீதாவின் வீடு விருகம்பாக்கம் புஷ்பா காலனியில்  அமைந்துள்ளது. அவரது வீட்டில்  இரண்டரை சவரன் ஜிமிக்கி திருடு போனதாக கூறப்படுகிறது. இது குறித்து   நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரில் தனது வீட்டில் இருந்த இரண்டரை சவரன் ஜிமிக்கியை காணவில்லை.

அதை யாரோ திருடிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.  காணாமல் போன தனது இரண்டரை சவரன் ஜிமிக்கியை கண்டுபிடித்து தரும்படி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.


இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  நகையை திருடியது யார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சீதா வீட்டில் நகை திருடப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!