undefined

  பயங்கரம்... அரசுப் பேருந்தில் சென்ற இளைஞா் வெட்டிக்கொலை!

 
 


 

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் 24 வயது  கணபதி மகன் விஷ்ணு.  இவா் வெள்ளிக்கிழமை காலை கொடியாலத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.திண்டுக்கரை அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 5 போ் கொண்ட கும்பலில் ஒருவா், பேருந்தில் ஏறி விஷ்ணுவை அடித்து கீழே தள்ளி விட்டுவிட்டார்.  

பின்னா் 5 போ் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உட்பட பல  ஆயுதங்களால் விஷ்ணுவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனா். இதில் படுகாயமடைந்து விஷ்ணு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.தகவல் அறிந்து சென்ற ஜீயபுரம் போலீஸாா் விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த கொலை சம்பவம் குறித்து  போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்றவா்களைத் தேடி வருகின்றனா். கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த ஓா் ஆண்டுக்கு முன்பு  ஏற்பட்ட தகராறில் கோகுல் என்ற நபா் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில் விஷ்ணுவுக்கும் தொடா்பிருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு பழிக்குப்பழியாக இச்சம்பவம் நடைபெற்று இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.