undefined

அறநிலையத்துறை அதிகாரிகள் முன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி!! பரபரப்பு!!!

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  இளம்பெண் ஒருவர்  திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார்.   நாகர்கோவில் ஒழுகினசேரியில்  ஆதி மூல விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வடசேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்  பலகோடி ரூபாயில் நில புலன்கள் உள்ளன.

இங்கு அமைக்கப்பட்டிருக்கும் கடைகளில் வாடகை கூட முறையாக செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.  இது குறித்து  ஏற்கனவே அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நீதி மன்றத்திலும் வழக்கும்நடைபெற்று வருகிறது. இதன்   அடிப்படையில் சில இடங்களில் சீல் வைப்பு மற்றும் கோயிலுக்கு சொந்தமான ஆக்ரமிப்பு நிலம் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அறநிலையத்துறை உதவி ஆணையர்    தலைமையில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து இருந்த கட்டிடத்தை இடிப்பதற்காக  நேற்று காலை அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் வந்தனர். அப்போது ஆதிமூல விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலத்திலிருந்த கடை மீட்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.  இந்த   அறிவிப்பு நோட்டீசும் ஒட்டப்பட்டது.  அதே பகுதியில்   உள்ள சிறிய கட்டிடத்தில் டீ கடை நடத்தி வரும் பெண் நிஷா பாப்பா   தனக்கு வாழ்வாதாரம் இல்லை. படிப்பறிவு இல்லை. நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறித்து தனக்கு எதுவும் தெரியாது. 20 ஆண்டுகளுக்கு மேலாக  இங்கு தான்  டீ கடை நடத்தி வருகிறேன். இந்த கடையை நம்பி தான் என் குழந்தைகளை நான் காப்பாற்ற வேண்டும். மகளுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் வைத்துள்ளேன். வாடகையும் தருகிறேன்.  

போதிய அவகாசம் தர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் கடைக்குள் வைத்தே என்னை இடித்து தள்ளுங்கள்  என கூறி கடைக்குள் அமர்ந்து கொண்டு வெளிவர மறுத்தார்.   அதிகாரிகளிடம் பேசிய வழக்கறிஞர் சரவணன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் நிவாரணம் வழங்கிவிட்டு தான் ஆக்ரமிப்பு அகற்ற வேண்டும் என  அறநிலையத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.  இந்த விஷயத்தில் மனசாட்சியுடன், கருணை காட்ட வேண்டும் எனக் கூறினார்.  ஆனால்  அதிகாரிகள் தரப்பில்  ஏற்கனவே போதிய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.  நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட முடியாது.   டீ கடைக்குள் இருந்து பெண் வர மறுத்ததால் அருகில் உள்ள கட்டிட சுவரை மட்டும் ஜேசிபி மூலம் இடித்தனர்.  கடைக்குள் இருந்து போராட்டம் நடத்தி கொண்டிருந்த நிஷா பாப்பா திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார்.  அங்கிருந்தவர்கள் மண்ணெண்ணெய் கேனை பறித்து, அவரது உடலில் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.இதனால் அப்பகுதியில் பெரும்   பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று, உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை