பிரிந்து சென்ற இளம் மனைவி... அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட கணவன்!
இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பெண்ணின் 2வது கணவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி கூடப்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டதோடு, பெண்ணின் உறவினர்களுக்கும் சமூகவலைளத்தில் அனுப்பப்பட்டு இருந்தது. இது குறித்து தகவலறிந்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், புதுவை சைபர் கிரைம் போலீசாரிடம் இது குறித்துப் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஆபாச படத்தை பதிவிட்டவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து விசாரணைக்காக புதுவைக்கு அழைத்து சென்றனர்.
போலீசாரின் விசாரணையில் இளம்பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களைப் பதிவிட்டவர் காஞ்சீபுரத்தை சேர்ந்த பாண்டியன் என்பதும், அவர் இளம்பெண்ணின் 2வது கணவர் என்பதும் தெரியவந்தது.
பாண்டியனுடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் மனைவி பிரிந்து சென்ற நிலையில், தன்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என மிரட்டி இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து பாண்டியனை போலீசார் கைது செய்து புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!