அட... ஒரே ஒரு ரூபாய் , ஒரு தேங்காய் மட்டும் வரதட்சிணை வாங்கி திருமணம் முடித்த இளைஞர்!  

 


 தற்போதைய வாழ்க்கை முறையில் திருமணங்களில் பல்வேறு கொண்டாட்டங்கள். ப்ரீ வெட்டிங் சூட் தொடங்கி ஆடம்பரமாக பல லட்சங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் என்ன தான் வாழ்க்கை முன்னேற்றம் அடைந்தாலும் வரதட்சணைகளும் வழங்கப்படுவது இன்னும் வழக்கத்தில் இருந்து வருகிறது. என்ன தான் நாகரீகம் வளர்ச்சி அடைந்தாலும் கிராமங்கள் தொடங்கி பெருநகரங்கள் வரை  வரதட்சணைக் கொடுமைகளும் தீவிரம் அடைந்து தான் வருகிறது.

 வரதட்சணை பிரச்சினையால் பல பெண்கள் தற்கொலை, கொலை செய்யப்படும் சம்பவங்களும் தினசரி கதையாகி வருகின்றன.  இதற்கெல்லாம் விதிவிலக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே ஒரு ரூபாய்  மற்றும் ஒரு தேங்காய் பெற்று வரதட்சணை வேண்டாம் எனக் கூறி திருமணம் நடைபெற்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சிகார் மாவட்டத்தை சேர்ந்த ஜெயா நாராயணன்  வரதட்சணைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர். இவர்  வரதட்சணை வாங்காமல் பெண்ணை திருமணம் செய்துள்ளார். அதே நேரத்தில்  மணமகள் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை  அவருடைய பெற்றோரிடம் கொடுக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!