உலகின் மிகப்பெரிய ”ஓம் வடிவ சிவன் கோவில்”.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நடைபெறும் திறப்பு விழா..!

 

உலகின் முகப்பெரிய ஓம் வடிவ சிவன் கோவிலில் நாளை திறப்பு விழா நடைபெறுகிறது. ராஜஸ்தானின் ஜோத்பூர் விமான நிலையத்திலிருந்து 71 கி.மீ. தொலைவில், பாலி மாவட்டத்தில் உள்ள ஜடான் என்ற கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான ``சிவன்' கோவில் கட்ட 1995ல் அடிக்கல் நாட்டப்பட்டது. பிரணவ மந்திரமான ``ஓம்' வடிவில் கட்டப்பட்டிருப்பது இதன் சிறப்பு ஆகும்.



இந்தியாவில் மட்டுமின்றி உலகில் எங்கும் சிவனுக்கு ஓம் வடிவில் கோயில் கட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.இந்த பிரம்மாண்டமான ``ஓம்'' வடிவிலான சிவன் கோவிலின் கட்டுமானப் பணிகள் கடந்த 27 ஆண்டுகளில் நிறைவடைந்துள்ளன. இதன் திறப்பு விழா நாளை (பிப்ரவரி 10) முதல் 19ம் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்ட ராமர் கோயிலுக்கு இணையாக இந்தக் கோயிலுக்கும் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க