undefined

அதிர்ச்சி... கணவனை முந்திரிக்காட்டில் கொலை செய்து எரித்த மனைவி... பரபரப்பு வாக்குமூலம்!!

 

 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில்  அரசுக்கு சொந்தமான முந்திரி காட்டில் அக்டோபர் 29ம் தேதி  ஒரு சடலம் பாதி எரிந்த நிலையில் காணப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிரவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி   இதில்   எரிக்கப்பட்டது ஆண் சடலம் எனவும்,  அருகே உள்ள வடகடல் கிராமத்தில் வசித்து வருபவர்  சுரேஷ் என்பதும் தெரியவந்தது.சுரேஷை  அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து காவல்துறை விடுத்த செய்திக்குறிப்பில் “  சுரேஷின் மனைவி   அனுப்பிரியா . இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர்.   சுரேஷ் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ கட்டும் தொழில் செய்து வந்தார். அனுப்பிரியாவின் சித்தப்பா மகனான ஆலவாயில் வசித்து வருபவர்   வேல்முருகன்.  இவர் தங்கை என்ற முறையில் அனுப்பிரியா வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். நாளடைவில் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.  இதுகுறித்து தெரிந்த சுரேஷ்  மனைவியை  பலமுறை கண்டித்துள்ளார். இதனால் சுரேஷை கொலை செய்ய காதலன் வேல்முருகனுடன் அனுப்பிரியா திட்டமிட்டார்.


தீபாவளி பண்டிகைக்காக குழந்தைகளுக்கு புத்தாடை எடுத்து கொடுக்க வாருங்கள்  அக்டோபர் 29ம் தேதி கணவர் சுரேஷை அனுப்பிரியா வரவழைத்தார். அதன்படி  அன்றிரவு இருசக்கர வாகனத்தில் வடகடல் கிராமத்துக்கு வெண்மான் கொண்டான் வழியாக கணவரை அனுப்பிரியா அழைத்து சென்றார். வெண்மான்கொண்டான் செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான முந்திரி தோப்பு அருகே சென்றபோது தனக்கு மயக்கம் வருவதாக கூறி வண்டியை நிறுத்தினார்.  பைக்கை நிறுத்தி விட்டு சுரேஷ் கீழே இறங்கி நின்றார். அப்போது முந்திரி தோப்பில் மறைந்திருந்த வேல்முருகன்  சுரேஷை சரமாரியாக வெட்டிக்கொலை  செய்தார். பின்னர் வெண்மான்கொண்டான் முந்திரி காட்டில் சாக்கில் சுரேஷ் உடலை கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதனை   வேல்முருகன், அனுப்பிரியா இருவரும் வாக்குமூலமாக அளித்தனர் .இதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!