தினமும் குடித்துவிட்டு செக்ஸ் டார்ச்சர்.. ஆத்திரத்தில் கணவனின் ஆணுறுப்பை மிதித்து கொலை செய்த மனைவி..!!
செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவரை ஆணுறுப்பில் மிதித்து கொன்ற மனைவியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் போடி ஜூவாநகரை சேர்ந்தவர் ரமேஷ்(47). இவரது மனைவி கிருஷ்ணவேணி(35). இருவருக்கும் திருமணமாகி சுமார் 19 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பெயிண்டர் வேலை செய்து வருவதால் அடிக்கடி கேரளாவுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று ரமேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் ரமேஷ் உடலில் நகக்கீறல், தோள்பட்டை பகுதியில் காயம் மற்றும் மர்ம உறுப்பில் காயம், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேஷின் மனைவி கிருஷ்ணவேணியிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இறுதியில் கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில்;- எனது கணவர் தினமும் குடித்து விட்டு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் நான் அதற்கு மறுத்து வந்தேன். அப்படி இருந்தத போதிலும் அவரது தொல்லை தாங்க முடியவில்லை. சம்பவத்தன்றும் என்னிடம் உறவுகொள்ள முயன்றபோது அவரை தாக்கி கீழே தள்ளினேன். மேலும் அவரை அடித்து தள்ளியதில் உடலில் காயங்கள் ஏற்பட்டது. அதன் பிறகும் ஆத்திரம் அடங்காமல் ஆண் உறுப்பில் மிதித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தேன் என கூறியுள்ளார். இதனையடுத்து கிருஷ்ணவேணியை கைது செய்த போலீசார் நீதிபதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.