undefined

துப்பாக்கி முனையில் பிரபல  கிரிக்கெட் வீரரிடம் மர்ம நபர்கள் கைவரிசை....!

 
ஆலன்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்  ஃபேபியன் ஆலன் .இவர் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடக்கும் SA 20-2024 லீக் போட்டியில்  விளையாடி வருகிறார்.  இந்நிலையில் ஜோகன்னஸ்பர்க்கில்  துப்பாக்கி முனையில்   மர்ம நபர்கள் அவரிடம் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

பேபியன் ஆலன்

 மர்ம கும்பல் ஒன்று 28 வயதான   ஃபேபியன் ஆலனை வழிமறித்து, அவரிடம் துப்பாக்கியை காட்டி   மிரட்டி, அவரிடம் இருந்து செல்போன் மற்றும் சில பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டது.  திடீரென நடைபெற்ற இந்த சம்பவம் போட்டிகளில் கலந்து கொள்ளும்   வீரர்களின் பாதுகாப்பு  குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.  அதே நேரத்தில் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் ஆலனுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்பது ஆறுதலான விஷயம்.  

இச்சம்பவம் குறித்து  வெஸ்ட் இண்டீஸ் அணியின் உயர்மட்ட கிரிக்கெட் அதிகாரி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  “எங்கள் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரே கோலி, ஆலனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில்  ஆலன் இங்கு நலமாக இருக்கிறார்.  மற்ற தகவல்கள் மற்றும் விளக்கங்கள் இருந்தால்  தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் மற்றும்  பார்ல் ராயல்ஸ் அணியுடன் பகிர்ந்து கொள்ளலாம்” எனவும் கூறியுள்ளார்.   

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க