பகீர் வீடியோ... மனைவி எதிரில் ‘அங்கிள்’ன்னு கூப்பிட்ட கடைக்காரர்... நடுரோட்டில் இழுத்து போட்டு அடித்த கணவன்!
போபால் மாநிலத்தில் "மாமா" என்று அழைப்பதில் ஏற்பட்ட தகராறில், கடைக்காரரை வாடிக்கையாளரும் அவரது நண்பர்களும் சேர்ந்து நடுரோட்டில் இழுத்துப் போட்டு அடித்ததாக கூறப்படுகிறது. போபாலின் ஜட்கேடி பகுதியில் விஷால் சாஸ்திரிக்கு சொந்தமான புடவை கடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து கடைக்காரர் விஷாலின் கூற்றுப்படி ரோஹித்தும் அவரது மனைவியும் கடந்த சனிக்கிழமையன்று புடவைக் கடைக்குச் சென்றனர். பல புடவைகளை வாங்குவதற்காக பார்த்தனர். ஆனால் வாங்கவில்லை. தொடர்ந்து புடவைகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் விஷால் அவர்கள் விரும்பும் விலை வரம்பைப் பற்றி விசாரித்தார். ரோஹித், ரூ.1,000 விலையில் ஒரு புடவையை வாங்க பரிசீலிப்பதாக பதிலளித்தார்.
அதற்குப் பதிலளித்த விஷால், "அங்கிள், வேறு ரேஞ்சில் புடவைகளைக் காட்டலாமா?" என்று கேட்டார். இந்த கருத்து ரோஹித்தை கோபப்படுத்தியது, அவர் 'மாமா' என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து தம்பதியினர் கடையை விட்டு வெளியேறினர். சிறிது நேரத்திற்குப் பிறகு, ரோஹித் தனது நண்பர்கள் குழுவினருடன் மீண்டும் கடைக்குத் திரும்பினார். அவர்கள் கடைக்கு வெளியே விஷாலை இழுத்துச் சென்று தடியடியாலும், பெல்ட்டாலும் அடித்து உதைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த விஷால், ரோஹித் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு முன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!