undefined

பகீர் வீடியோ... பாராசூட் திறக்கலை... 29வது மாடியிலிருந்து குதித்து 'ஸ்கை டைவர்' பலியான சோகம்!

 

வாழ்க்கை அடுத்த நிமிஷத்தில் என்ன ஆச்சர்யங்களையும், அதிர்ச்சியையும் தன் உள்ளங்கையில் ஒளித்து வைத்திருக்கிறது என்பது விநோதம் தான். பாராசூட் திடீரென இயங்காததால், பாராசூட் திறக்காத நிலையில், பிரபல 'ஸ்கை டைவர்' நதி ஒடின்சன், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பட்டாயாவில்  29 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் மேற்பகுதியிலிருந்து கீழே டைவ் அடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

நதி ஒடின்சன் ஸ்கை டைவிங் செய்யும் வீடியோக்களுக்கு உலகளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வந்தன்ர். எதிர்பாராதவிதமாக பாராசூட் விரியவே இல்லை. இதனால் மிக வேகமாக கீழே விழுந்த நதி ஒடின்சன் தரையில் மோதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 


 நதி ஒடின்சன் கீழே குதிப்பதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவர்  விசாரணை நடத்தி வருவதாக  போலீஸார் தெரிவித்துள்ளனர். நதி ஒடின்சனின் முகநூல் பக்கம், தாய்லாந்தின் பல்வேறு இடங்களிலிருந்து 'ஸ்கைடைவிங்', 'பேஸ் ஜம்பிங்' வீடியோக்களை கொண்டுள்ளது.'ஸ்கைடைவிங்'-கில் சாகசம் புரிந்து வந்த வீரர், பாராசூட் விரியாமல் படுகாயம் அடைந்து உயிரிழந்த சம்பவம்   அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க