undefined

பகீர் வீடியோ.. நாயின் வாலில் பட்டாசு கட்டி வெடித்த இளைஞர்... குவியும் கண்டனங்கள்!

 

நாடு முழுவதும் இன்று மக்கள் தீபாவளி பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடி வரும் நிலையில் சில இடங்களில் தீபாவளி கொண்டாட்டங்களின் போது மனிதர்களின் கொடூர எண்ணங்களால் விபரீதங்களும் நிகழ்ந்துள்ளது. 

சில இடங்களில் பட்டாசுகளை கைகளில் பிடித்தப்படி கொளுத்து, சாலைகளில் நடந்துச் செல்லும் பெண்கள் மீது வீசுவது, ஹீரோயிசத்தைக் காட்டுகிறேன் பேர்வழி என்று பேப்பர்கள், கண்ணாடி பாட்டில்களில் பட்டாசுகளை வைத்து வெடிப்பது போன்ற விபரீதங்களும் அரங்கேறின. 


இந்நிலையில், மும்பையில் இளைஞர் ஒருவர் நாயின் வாலில் பட்டாசு கட்டி விட்டு கொளுத்தி வெடிக்கச் செய்த கொடூர வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் இந்த செயலுக்கு  கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

மும்பையில் எந்த பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று இன்னும் கண்டறியப்படாத நிலையில், அப்பாவி நாய் ஒன்றின் வாலில் பட்டாசு கட்டி வாலிபர் ஒருவர் அந்த நாயைத் துன்புறுத்துவது கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து பீட்டா அமைப்பிற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தீபாவளி கொண்டாடுகிறோம் என்கிறப் பெயரில் இளைஞர்கள் பேச முடியாத உயிரினத்தை வேண்டுமென்றே துன்புறுத்தியுள்ளனர். தனது வாலில் பட்டாசு கட்டப்பட்டி வெடிக்கப்பட்ட நிலையில் பீதியடைந்த நாய் பயத்தில் ஓடுகிறது. இந்த சம்பவத்தில் நாய்க்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட இளைஞன் யார் என்பது தெரியவரும் வரை வீடியோவைப் பகிருமாறு இணையப் பயனர்கள் வலியுறுத்துகின்றனர். நாயின் வாலில் இளைஞர்கள் பட்டாசுகளை கட்டிவிட்டு பட்டாசுகளை கொளுத்துவது வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த மர்ம நபர் பட்டாசு கொளுத்தும்போது மற்றொரு நபர் நாய் ஓடிவிடாமல் இருப்பதற்காக அதன் காதுகளைப் பிடித்துக் கொண்டிருப்பதை வீடியோவில் காணலாம்.

இரக்கமற்ற இளைஞர்கள் அப்பாவி நாய்க்கு தீங்கு விளைவிக்கும் இத்தகைய தீய செயலைச் செய்வதைத் தடுத்திருக்க வேண்டும். பட்டாசுகளை நாயின் வாலில் கட்டியவருக்கு அதே சிகிச்சை அளிக்க வேண்டும் என சமூக வலைதளவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

"இதுபோன்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பேசாத உயிரினம் இந்த b*****d க்கு என்ன தீங்கு செய்தது? அவன் பின்புறத்தில் இதேபோன்ற வெடிகுண்டு வைக்கப்பட்டால் , அதுக்கு அப்புறம் தான் தெரியும் இந்த மீ ****** எங்காவது அவனைக் கண்டுபிடித்து கைது செய்யப்படும் வரையில் இந்த வீடியோவை ரீ ட்வீட் ப்ண்ணுங்க” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

வைரலான வீடியோவின் விவரங்களைப் பகிருமாறு சமூக ஊடகப் பயனரை பீட்டா இந்தியா அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. அதில், "தயவுசெய்து எங்கள் அவசர எண்ணான 98201 22602ல் எங்களை அழைத்து, சம்பவம் பற்றிய விரிவான தகவலை வழங்கவும் அல்லது உங்கள் தொடர்பு விவரங்களை வழங்கவும், நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்" என்று பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!