பகீர் வீடியோ.. காரில் சென்ற இளம்பெண்ணை விரட்டி விரட்டி துன்புறுத்திய இளைஞர்கள்!

 

பெங்களூரு பேகூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு இளம்பெண் காரில் மடிவாளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் மற்றொரு பெண்ணும் வந்துள்ளார். மருத்துவமனைக்கு சென்றுவிட்டு இளம்பெண் உள்பட 2 பேரும் மடிவாளாவில் இருந்து பேகூரில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டனர். இரவு 9.15 மணியளவில் மடிவாலா சுரங்கப்பாதையில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தபோது, இளம்பெண் இடது பக்கம் திரும்பும் இன்டிகேட்டரை ஆன் செய்துவிட்டு வலது பக்கம் காரை திருப்பியதாக தெரிகிறது. காரின் பின்னால் ஸ்கூட்டரில் வந்த 3 வாலிபர்கள் இண்டிகேட்டர் சரியாக  இல்லாததால் நிலை தடுமாறினர்.

அந்த பெண் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார். இதையடுத்து ரோந்து பணியில் இருந்த மடிவாளா போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இதனிடையே கோரமங்களா 5வது பிளாக்கில் காரை நிறுத்திய 3 பேர் காரின் கதவை திறக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அலறினார். அப்போது, தகவல் கிடைத்ததும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

போலீசாரை பார்த்ததும் 3 பேரில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்ற 2 பேரையும் மடிவாளா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேஷாத்திரிபுரத்தை சேர்ந்த ஜெகநாத் மற்றும் தேஜஸ் என்பது தெரியவந்தது. தப்பியோடியவரின் பெயர் கண்ணன். அதேநேரம், இளம்பெண்ணின் கார், தங்கள் ஸ்கூட்டரில் மோதி, அவளை ஓட்டிச் சென்றதாக, இருவரும் போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் ஸ்கூட்டர் மீது கார் மோதியதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

காரின் இன்டிகேட்டர் தவறுதலாக போடப்பட்டதால் ஸ்கூட்டர் மூலம் இளம்பெண்ணை துன்புறுத்தியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் மடிவாளா போலீஸார் வழக்குப் பதிந்து தேஜாஸ், ஜெகநாத்தை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்