வைரலாகும் வீடியோ... நடுரோட்டில் குடிபோதையில் இளம்பெண் ரகளை!

 

சமீபகாலங்களாக தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைபொருட்கள் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

சென்னைப் போன்ற பெருநகரங்களில் இரவுகளில் இளம்பெண்கள் அளவுக்கதிகமான குடி போதையில், போக்குவரத்து காவலர்களுடன் சண்டையிடும் வீடியோ காட்சிகள் அவ்வப்போது வெளியாகி சமூகம் குறித்த கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 20 வயது  மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் குடிபோதையில் நடுரோட்டில் ரகளை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில், 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மதுபோதையில் தள்ளாடியபடியே சாலையில் நடந்து செல்கிறார். அந்த பகுதியில் வேன் நிறுத்தத்தில் இருப்பவர்களிடம் தகராறு செய்யும் இளம்பெண் பின்னர் திடீரென ஒட்டன்சத்திரம் சாலையில் சென்ற லாரி, கார், ஆட்டோ ஆகியவற்றை கையை நீட்டி வழிமறித்து தகராறு செய்ய துவங்குகிறார். 

அதன் பின்னர், அந்த பகுதியில் இருந்தவர்கள், போதையில் அட்டகாசம் செய்யும் இளம்பெண் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  குடிபோதையில் இருந்த போதிலும், போலீஸ் என்றவுடன் இளம்பெண்ணுக்கு அச்சம் ஏற்பட்டது.

இதற்கு மேல் இனி இங்கு இருந்தால், போலீசாரிடம் சிக்கி கம்பி என்ன வேண்டியிருக்கும் என்று கருதிய அவர், அங்கிருந்து தப்பிக்க முடிவு செய்தார். அந்த சமயத்தில், வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி ஒரு தனியார் பேருந்து வந்தது. அந்த பேருந்தை இளம்பெண் வழிமறித்தார். பேருந்து நின்றவுடன், கண்இமைக்கும் நேரத்தில் பேருந்தில் ஏறி சென்று விட்டார். 

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண் சென்னை தமிழில் அங்கிருந்தவர்களைத் திட்டிக் கொண்டிருந்ததால், அவர் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏதேனும் ஒரு மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் அவர் வேடசந்தூருக்கு எதற்காக வந்தார் என்று தெரியவில்லை என அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். 

ஒவ்வொரு கட்சியும் டாஸ்மாக் விஷயத்தில் தங்களுக்கு அக்கறை இல்லாததைப் போல காட்டிக் கொண்டாலும், டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்கவே ஆட்சிக்கு வருகிற அரசியல் கட்சியினர் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க